Saturday, 3 December, 2022
yaraglobal
HomeUncategorizedகந்தக்காடு அமைதியின்மை: 2 இராணுவம் ;2 விமான படை வீரர்கள் கைது

கந்தக்காடு அமைதியின்மை: 2 இராணுவம் ;2 விமான படை வீரர்கள் கைது

பொலனறுவை மாவட்டத்தில் உள்ள வெலிகந்தை, கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,இரண்டு இராணுவ வீரர்களும் இரண்டு விமான படை வீரர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த புதன்கிழமை அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இராணுவத்தினரும் போலீசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொழுதிலும், அமைதியின்மையை தொடர்ந்து சுமார் 600 கைதிகள் தப்பி ஓடினர்.
இவர்களில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டதோடு பலர் மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை முகாமில் சரணடைந்தனர்.
இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் நான்கு படை வீரர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments