இன்று காலை சேவையில் ஈடுபடவிருந்த 22 ரயில்களின் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
ரயில்வே, ஊழியர்கள் உரிய நேரத்துக்கு வர முடியாததால் இந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊழியர்கள் உரிய நேரத்துக்கு வர முடியாத நிலை இருக்கின்றது. கொழும்பு உட்பட நகர்ப்புறங்களில் பஸ்களும் போதிய அளவில் சேவையில் ஈடுபடவில்லை. பத்து வீதமான பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த நெருக்கடி நிலையில், ரயில்வே ஊழியர்களின் வருகையும் பாதித்திருப்பதனால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்திருக்கின்றது.
22 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதனால் அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும் பணிக்குச் செல்ல முடியாமல் இக்கட்டான நிலையில் திண்டாடியதாக தெரிய வருகிறது.