Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபட்டினி சாவில் இருந்து மீட்போம்: யாழ்ப்பாணத்தில் நாளை கையெழுத்துப் போராட்டம்

பட்டினி சாவில் இருந்து மீட்போம்: யாழ்ப்பாணத்தில் நாளை கையெழுத்துப் போராட்டம்

( நமது பருத்தித் துறை நிருபர் )

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மக்களைப் பட்டினிச்சாவிலிருந்து மீட்போம் எனும் தொனிப்பொருளில் கையெழுத்து போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் இதற்கான அழைப்பை விடுத்தார்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு இந்த கையெழுத்து போராட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலரிடம் இறுதியாக கையளிக்கப்படவுள்ளது.
அரசியல் கட்சிகள் பொதுமக்கள் என அனைவரும் எவ்வித பேதமுமின்றி இந்த கையெழுத்து போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments