Friday, 19 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநீடித்து நிலைக்குமா ரணிலின் ஆட்சி?: பதவியை பறிக்கும் முயற்சியில் பெரமுன || ஓர் ஆய்வு

நீடித்து நிலைக்குமா ரணிலின் ஆட்சி?: பதவியை பறிக்கும் முயற்சியில் பெரமுன || ஓர் ஆய்வு

பாராளுமன்றத்தினுள் தனது ஐக்கிய தேசியக் கட்சியின் எந்த ஒரு பலமும் இல்லாத தலைவர் ஒருவர், மிகத் துணிச்சலோடு பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கின்ற நிலையில், நாட்டை காப்பதற்கு யாராவது தலை கொடுக்க வேண்டும். அதற்கு தான் தயாராகவே இருக்கிறேன் என்று களத்தில் குதித்தவர் தான் ரணில் விக்கிரமசிங்க.
Mr. Clean – என்று ரணிலுக்கு சர்வதேச அரங்கில் ஒரு பெயர் உண்டு. அவருடைய சுத்தமான நிலையில் தேசிய நோக்கோடு பதவியை எடுக்க முன் வந்தாரோ தெரியவில்லை. ஆனால், ஒரு பலவீனமான தலைவர் தேவை என்பது பொது ஜன பெரமுன கட்சியினதும் ஜனாதிபதியினதும் இலக்காக இருந்தது.
மக்களின் எதிர்ப்பினால் வாலை சுருட்டிக் கொண்டு சோர்ந்து போயிருந்த பொதுஜன பெரமுன , இப்போது தனது சுய ரூபத்தை வெளிக்காட்ட துவங்கி இருக்கிறது.
பிரதமர் ரணிலை பதவியில் இருந்து நீக்குவதற்கான சகல முயற்சிகளிலும் பொது ஜன பெரமுன இறங்கி இருக்கிறது என்பது தெட்டத் தெளிவாகி இருக்கிறது. பொது ஜன பெரமுன
கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நேற்று கொழும்பிலே நடந்திருக்கிறது.
இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற 11 கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டார்கள்.
இருக்கின்ற பிரதமரை மாற்றி தங்களது கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற தொனியில் அனைவருமே கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.​
கூட்டணிக் கட்சிகளில் அங்கம் வகிக்கின்ற முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச வாசுதேவ நாணயக்காரவிடம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.
” அங்கிள், அபி அப்பேம ஆண்டுவ ஹதமு… ” — அங்கிள், நாங்கள் எங்களுடைய அரசாங்கத்தை உருவாக்குவம்.— என்று கூறியுள்ளார்.
இதிலிருந்து ஒரு உண்மை தெட்ட தெளிவாக புரிகிறது. பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை புரட்டும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதுதான்.
பாராளுமன்றத்தினுள் கூடுதல் ஆசனங்களை கொண்டிருக்கும் பொது ன பெரமுன கட்சியின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொள்வதற்கு ரிய முயற்சிகள் நடக்கின்றன.
யாருமே தலைமை பொறுப்பை ஏற்காத நிலையில், நாட்டு நலன் கருதி பிரதமர் பதவியை பொறுப்பேற்றவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்று அவரும் கூறுகிறார்.பரவலாகவும் பேசப்படுகிறது. திரு. ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதனால் ராஜபக்ஷ குடும்பத்தினர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது யதார்த்தமான உண்மை. அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியையும் வளர்த்தெடுக்கும் இலக்கும் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருக்கிறது.
பொதுஜன பெரமுன கட்சி இப்பொழுது எடுத்திருக்கின்ற நிலைப்பாட்டினால், ரணில் விக்கிரமசிங்கவின் பதவி பறிபோகும் நிலையை ஏற்படுத்துமா?… எதற்கும் அரசியல் காய் நகர்த்தல்களையும் சித்து விளையாட்டுகளையும் பொறுத்திருந்து பார்ப்போம்… ( Ceylonsri )

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments