Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுதென்மேல் பருவமழை தீவிரமடைகிறது; சில இடங்களில் பலத்த காற்று

தென்மேல் பருவமழை தீவிரமடைகிறது; சில இடங்களில் பலத்த காற்று

**நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், இலங்கையின் மேல், தென் கடற்பரப்புகளிலும், நாட்டின் தென் நிலப்பகுதியிலும் காற்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது

வடமேல் மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments