விமானங்களுக்கு தேவையான எரி பொருளை இறக்குமதி செய்வதற்கு தனியாருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கூடிய கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எட்டப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது.
இதற்கேற்ற வகையில் சட்ட திருத்தம் கொண்டு வருவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் இது தொடர்பில் கூறியிருக்கிறார்.
இந்த விமானங்களுக்கான எரிபொருள் நெருக்கடியால் இலங்கைக்கு எரிபொருள் நிரப்புவதற்கு வருகின்ற விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.