Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமுஸ்லிம் தனியார் சட்டம் முழுமையாக நீக்கம் - முஸ்லிம் பெண்களின் இத்தா கால விடுமுறை ரத்து...

முஸ்லிம் தனியார் சட்டம் முழுமையாக நீக்கம் – முஸ்லிம் பெண்களின் இத்தா கால விடுமுறை ரத்து – முகம் மறைக்கும் ஆடைக்கு தடை – தன் பாலின உறவுக்கு அனுமதி உள்ளிட்ட 43 பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார் ஞானசார தேரர்

இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், யுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல், மத மாற்றத்தை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, ”ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது.

கொழும்பு – கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரினால், இந்த அறிக்கை, ஜனாதிபதியிடம் நேற்று (29) முற்பகல் கையளிக்கப்பட்டது.

இலங்கையில் ”ஒரே நாடு – ஒரே சட்டம்” என்ற கருத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்று, இலங்கைக்கு தனித்துவமான கருத்தியல் கட்டமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்குவதற்கு ஜனாதிபதியினால், 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 மற்றும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆகிய தேதிகளில் அதிவிசேட வர்த்தமானி ஊடாக இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டது.

தொழில் வல்லுநர்கள், அரசு சாரா அமைப்புக்கள், மதக் குழுக்கள், பல்வேறு இனக்குழுக்கள், பல்கலைக்கழக சமூகம் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் 1,200ற்கும் அதிகமான சாட்சிகளை உள்ளடக்கிய, 43 பரிந்துரைகளுடனான 8 அத்தியாயங்களை கொண்டு, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் நேற்று கையளிக்கப்பட்ட நிலையில், அந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பிரதான பரிந்துரைகள் குறித்து, பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

இலங்கையில் தன்பாலின உறவு கொள்ளுதல் மற்றும் தனிபாலின திருமணம் ஆகியவற்றிற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்பாலின உறவு கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, ”ஒரே நாடு – ஒரு சட்டம்” ஜனாதிபதி செயலணி, தமது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

எனினும், தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்க கூடாது என பரிந்துரை செய்துள்ள ஜனாதிபதி செயலணி, அவ்வாறு தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கினால், அது தன்பாலின உறவுகளை ஊக்குவிக்க வலிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், யுத்த குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் மற்றும் ராணுவத்தினரை, உரிய புனர்வாழ்வு திட்டத்தின் கீழ், ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

யுத்த குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தம்மால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சாதகமான பதிலை வழங்கியதாக, ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணி பரிந்துரைத்தவை என்னென்ன?

1.அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளின் தேர்தல்களுக்கு பயன்படுத்தும் நிதி, எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து, கணக்காய்வு செய்வதற்கு புதிய சட்டமொன்று எதிர்வரும் தேர்தலுக்கு முன்னதாக உருவாக்கப்பட வேண்டும்

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments