கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை மஞ்சந்தொடுவாய் வடக்கு கிராமத்தின் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரி முன்பாக இன்று (30) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் 1998,2001 ம் ஆண்டு உயர்தர பழைய மாணவர்களினால் இத் திருவுருவச் சிலை அன்னாரின் சொந்த ஊரான மஞ்சந்தொடுவாயில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களினால் மஞ்சந்தொடுவாய் பொதுமக்கள் நலன் விரும்பிகள் மற்றும் சிவானந்தியன் சகபாடிகள் சார்பில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி பாரதி கெனடி, மஞ்சந்தொடுவாய்.தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் மற்றும் சிவலிங்கம் ஐயாவின் பாரியார், புதல்வர் வைத்தியர் விவேகானந்தன் உள்ளிட்ட ஆலைய நிர்வாக சபை உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
