நாட்டில் நிலவுகின்ற பாரிய எருபொருள் பற்றாக்குறை காரணமாக புகையிரத இயக்குனர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உரியவிதத்தில் சேவைக்கு சமூகமளிக்க முடியாத காரணத்தால் நேற்றைய தினம் சுமார் 26 புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.
இன்றும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் இயக்குனர்கள், ஊழியர்களால் சேவைக்கு சமூகமளிக்க இயலாததால் அதிகளவிலான புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாது என்றும் விஷேடமாக நீண்ட தூரப்புகையிரதங்கள் சேவையில் இருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுவதாகவும் இலங்கைப் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.