உங்கள் எண்ணத்தில் தோன்றிய விலங்குகள் எல்லாம் அவ்வளவு விசித்திரமானவை இல்லை என்று நீங்களே உணரும் அளவிற்கு, மிகவும் விசித்திரமான பார்ப்பதற்கே ஒருவித அருவருப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விசித்திரமான உயிரினத்தின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த உயிரினம் ஆழ்கடல் வேட்டையன் என்று கூறப்படுகிறது. ஆம், ஆழ்கடலில் இருளில் ராஜ்ஜியம் செய்யும் கொடூரமான விசித்திர விலங்கு இது என்று கடல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
உண்மையைச் சொல்லப் போனால், மனிதனுக்குத் தெரியாத பல புதிரான விஷயங்கள் இன்னும் ஏராளமாக ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்படாமல் மர்மமாகவே இருக்கிறது.
மனிதனுக்குத் தெரியாத எண்ணில் அடங்காத பல அறியப்படாத உயிரினங்கள் ஆழ்கடலில் மறைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று கடல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
விண்வெளிக்குச் செல்ல முடிந்த மனிதனால், இன்னும் கடலின் முழுமையான ஆழத்தை அளக்க முடியவில்லை.