Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeவிளையாட்டுஇலங்கை, ஆஸ்திரேலிய அணிகள்: டெஸ்ட் போட்டியில் முதலாம் நாள் நிறைவு

இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள்: டெஸ்ட் போட்டியில் முதலாம் நாள் நிறைவு

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் நிறைவடைந்துள்ளது. முதலாம் நாள் ஆட்ட நிறைவில் அவுஸ்திரேலிய அணி தமது முதல் இனிங்ஸில் 03 விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 59 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய இலங்கை அணி 59 ஓவர்களில் 212 ஓட்டங்களை எடுத்தது.
அணிசார்பில், நிரோஷன் திக்வெல்ல 58 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்யூஸ் 39 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணியின் நெதன் லயன் 90 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்வெப்சன் 55 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இன்றைய நாள் ஆட்ட முடிவில் 25 ஓவர்களுக்கு 03 விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதன்படி, முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியைவிட அவுஸ்திரேலிய அணி 114 ஓட்டங்கள் பின்தள்ளிய நிலையில் உள்ளது.
களத்தில் உஸ்மன் கவாஜா 47 ஓட்டங்களுடனும், டிராவிஸ் ஹெட் 06 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் ரமேஷ் மெண்டிஸ் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments