Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுUPDATE : சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 47 பேர் கைது

UPDATE : சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 47 பேர் கைது

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வென்னப்புவ, நாத்தாண்டி, சிலாபம், மட்டக்களப்பை சேர்ந்தவர்கள்
**அவுஸ்திரேலியா ஒரு போதும் நாட்டுக்குள் அனுமதி வழங்காது

**நாடு கடத்தப்பாட்டால் சட்டபூர்வமாக கூட அவுஸ்திரேலியா செல்ல முடியாது
நீர்கொழும்புக்கு அருகில் மேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​47 பேருடன் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் இலங்கையின் பல நாள் மீன்பிடி கப்பலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை கடற்படை கப்பல் நந்திமித்ரா நேற்று (27) இரவு நீர்கொழும்பு மேற்கு கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான இலங்கையின் பல நாள் மீன்பிடி கப்பலொன்றை அவதானித்து சோதனை செய்தது.
அதற்கமைய, குறித்த படகில் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் உள்ளிட்ட 34 ஆண்கள், வயதான பெண்கள் 06 பேர், 07 சிறுவர்கள் உள்ளிட்டோர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வென்னப்புவ, நாத்தாண்டி, சிலாபம், மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 01 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்து, பணம் சம்பாதிக்கும் நோக்கில் பொய்யான தகவல்களைப் பயன்படுத்தி பாதுகாப்பற்ற படகுகள் மூலம் மேற்கொள்ளப்படும் மனிதக் கடத்தலில் சிக்கி, உயிரைப் பணயம் வைத்து சட்டத்தின் முன் குற்றவாளிகளாக மாறுவதைத் தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.
இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு அனுசரணையும் பெற மாட்டார்கள் என்பதுடன், அவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக நாடு கடத்தப்படுவதால் எதிர்காலத்தில் சட்டபூர்வமாக கூட அவர்களால் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வதற்கான வாய்ப்பும் இல்லாமல் போகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments