ரயில் கட்டணங்களில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைகள் பலதடவைகள் அதிகரிக்கப்பட்ட பொழுதிலும் ரயில்வே கட்டணங்களில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ரயில்வே கட்டணங்கள் அதிகரிப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, பொதுக் கொள்கையின் அடிப்படையில் கட்டணங்களை மாற்றி அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக கூறி இருந்தார்.