Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமுடங்கியது இலங்கை

முடங்கியது இலங்கை

**எரிபொருள் இல்லை… நாடுகளும் கை கொடுப்பதாக இல்லை

** நாடெங்கும் முக்கிய நகரங்கள் செயலிழப்பு

வரலாற்றில் என்றும் இல்லாதவாறான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முழு நாடும் ஸ்தம்பிதம் அடைகின்ற நிலைமை ஏற்பட்டு உள்ளது.


கொழும்பு மாநகரம் உட்பட நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் வாகன போக்குவரத்துகள் இல்லாது இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டிருப்பதை காணமுடிகின்றது.
நாடு முடக்கப்பட்டுள்ள ஒரு நிலையையே
காணக்கூடியதாக இருக்கின்றது. கொழும்பு மாநகரை பார்க்கின்ற பொழுது, உத்தியோகப்பற்றற்ற முறையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அல்லது நாடு முடக்கப்பட்டுள்ள நிலையை போல் தோன்றுகிறது.


வாகனப் போக்குவரத்துகளும் குறைந்து,மக்கள் நடமாட்டமும் குறைந்த நிலையில் தான் கொழும்பு மாநகரம் காட்சியளிக்கிறது.

எரிபொருள் இன்று அல்லது நாளை வருமென்ற அரசாங்கத்தின் அறிவிப்பினால் ஏமாந்து போன நிலையில், கொழும்பு அடங்கலாக அனைத்து மாநகரங்களும் செயல் இழந்து வெறிச்சோடி காணப்படுகின்றன. கொழும்பில் அரச, தனியார் பஸ் சேவைகளை தவிர்த்து வீதிகளில் வாகன ங்களை காண்பது குதிரை கொம்பாகி உள்ளது.


எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் சகிதம் உரிமையாளர்கள் தவம் கிடப்பதையும் காண முடிகின்றது. முச்சக்கர வண்டிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடுகின்ற போதிலும் ஐந்து மடங்கு கட்டணம் கோரப்படுகின்றது.


அலுவலகங்களுக்குச் செல்வோரும் அத்தியாவசியத் தேவைகள் கருதி வெளியில் செல்வோரும் ( பெரும்பாலானவர்கள் ) நடையாக செல்வதையே பார்க்க முடிகின்றது.
கொழும்பு மாநகரில் சமையல் எரி வாயு இல்லாத காரணத்தால் ஹோட்டல்கள், சாப்பாட்டு கடைகள் போன்றவை மூடப்பட்டு உள்ளன. இதனால், வெளிமாவட்டங்களில் இருந்து வந்து கொழும்பு மாநகரில் வேலைகளில் ஈடுபடுபவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நெருக்கடி நிலையினால் கொழும்பில் சன நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.


கப்பலில் எரிபொருட்கள் வருவது தாமதப்பட்டு உள்ளது. காரணம் டொலர் கட்ட முடியாத நிலையில் இலங்கை உள்ளது. இலங்கை பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாததனால் இலங்கைக்கு உதவுவதில் ஏனைய நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.
இந்தநிலையில், டொலர் நெருக்கடியும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது.

இதே நேரம் கையிருப்பில் எரிபொருள் கிடையாது என்று பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்து உள்ளது. எரிபொருள் முட்டாளாக இல்லாத நிலையில் நாடு ஒரு முழுமையான பதட்ட நிலையில் இருக்கின்றது. எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அரசாங்கம் திண்டாடிக் கொண்டிருக்கிறது. நட்பு நாடுகள் உடனான பேச்சுவார்த்தைகளும் தொடர்கின்றன. என்றாலும் யாரும் திறந்த மனதுடன் உதவுவதாக இல்லை.


அண்டை நாடான இந்தியாவை தவிர எந்த ஒரு நாடும், ஆபத்துக்கு உதவும் மனநிலையை கொண்டிருப்பதாக தெரியவில்லை. இதேவேளை, அவசரமாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமைச்சர்கள் காஞ்சன விஜேசேகர, ஹாபீஸ் நசீர் அகமட் ஆகியோர் கட்டாருக்கும், அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் செயலாளரும் ரஷ்யாவுக்கும் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.


ரஷ்யாவில் நடக்கும் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமைந்தால், இரு நாடுகளுக்கு இடையிலும் இராஜதந்திர ரீதியான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments