Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுரயில் கட்டணங்களை அதிகரிக்க கோருகிறது ரயில்வே திணைக்களம்

ரயில் கட்டணங்களை அதிகரிக்க கோருகிறது ரயில்வே திணைக்களம்

ரயில் கட்டணங்களை உடனடியாக அதிகரிக்குமாறு ரயில்வே திணைக்களம் அமைச்சரவையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


நாளாந்தம் ஏறி செல்லும் எரிபொருளுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் கட்டண அதிகரிப்பை செய்து தர வேண்டும் என்று ரயில்வே திணைக்களம் அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


கட்டண அதிகரிப்பு செய்தே ஆக வேண்டும் என்பதை அமைச்சர்களும் ஏற்றுக் கொண்ட போதிலும் உடனடியாகச் செய்ய முடியாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட அளவில் கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்திருக்கிறார்கள். என்றாலும், பஸ் கட்டணங்களை விட குறைந்த அளவிலேயே கட்டண அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.


ரயில் கட்டண அதிகரிப்புக்கு அரசாங்கத்தின் கொள்கை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு பொதுக்கொள்கையாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments