Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமின் துண்டிப்பு அமுலாக்கம் தொடர்பான புதிய அறிவிப்பு

மின் துண்டிப்பு அமுலாக்கம் தொடர்பான புதிய அறிவிப்பு

இன்று முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில் A முதல் L மற்றும் P முதல் W வரையான வலயங்களில் 3 மணி நேரம் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


குறித்த வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படவுள்ளது.


அத்துடன், கொழும்பு நகர் பகுதிகளில் எதிர்வரும் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் காலை 6 மணிமுதல், 8 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலயங்கள் மின் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5 மணிமுதல் 8 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேரம் மின் துண்டிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments