Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமின் கட்டண அதிகரிப்பு: முன்மொழிவுகளை வழங்க பொதுமக்களுக்கு அவகாசம்

மின் கட்டண அதிகரிப்பு: முன்மொழிவுகளை வழங்க பொதுமக்களுக்கு அவகாசம்

** 835% கட்டண அதிகரிப்பு கோருகிறது மின்சார சபை

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் முன்மொழிவுகளை முன்வைக்க, நாளை (28) முதல் 3 வாரங்களுக்கு பொதுமக்களுக்கு அவகாசம் வழங்கப்படுவதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று (27) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.


மின்சார சபையினால் தற்போது மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் முன்மொழிந்துள்ள கட்டண அதிகரிப்பை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.


அதற்கமைய குறித்த விடயம் தொடர்பான தமது யோசனைகளை எழுத்து மூலம் முன்வைக்குமாறு அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


இதேவேளை, மின்சார சபையினல் 835% மின் கட்டண அதிகரிப்பு கோரப்பட்டுள்ளதாகவும், அதனை ஏற்க முடியாது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments