இலங்கையில் தற்போது ஒரு நாளைக்கு தேவையான எரிபொருள் கூட கையிருப்பில் இல்லை என தெரியவருகிறது.
இலங்கை பெட்ரோலிய போட்டு தாவன அதிகாரிகளை ஆதாரங்காட்டி, ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இப்போதைய நிலையில், 1,100 தொன் பெற்றோல் மற்றும் 7,500 தொன் டீசல் மட்டுமே உள்ளது.
இலங்கை கடனை செலுத்த தவறியதன் காரணமாக சர்வதேச நிறுவனங்கள் இலங்கையை மோசமாக ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இலங்கைக்கு எரிபொருளை வழங்க சர்வதேச வங்கியிடம் உத்தரவாதம் கோருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக நாட்டிற்கு எரிபொருள் கப்பல்கள் எதுவும் வரவில்லை. எரிபொருள் கப்பல் இரண்டொரு தினங்களில் வரவில்லையென்றால், பொது போக்குவரத்து கூட தடைப்பட்டு நாடு முற்றாக முடங்கிவிடும் எனவும் குறித்த நாழிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாததால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கலாம் என்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.