Saturday, 20 August, 2022
yaraglobal
HomeUncategorizedகே.கே. எஸ்- தமிழகம் சரக்கு கப்பல் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி

கே.கே. எஸ்- தமிழகம் சரக்கு கப்பல் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி

காங்கேசன்துறைக்கு தமிழகத்துக்கும் இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கி உள்ளது.


எதிர்வரும் 1ஆம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


இந்த சேவை மூலம் தமிழ்நாட்டிலிருந்து எரி பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை நேரடியாக யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவர முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவைக்கும் தனது யோசனையை அறிக்கையாக சமர்ப்பித்திருந்தார்.


கடந்த வாரம் அமைச்சரவையும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.


இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சு நீண்ட ஆலோசனையின் பின் இன்று அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments