(கனகராசா சரவணன்)
இலங்கையில் இருந்து இந்தியா தனுஸ்கோடி கோதண்டராமர் கடற்கரைப் பகுதிக்கு பைவர் படகில் நள்ளிரவில் வந்து இறங்கி உணவு தண்ணீர் கிடைக்காமல் மயக்க நிலையில் இருந்த கணவன் மனைவியை இன்று திங்கட்கிழமை (27) காலையில் மீட்டுள்ளதாக மெரைன் பொலிசார் தெரிவித்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையைச் சேர்ந்த வயது முதிர்ந்த கணவன் மனைவி இருவர் தனுஷ்கோடி கோதண்டராமர் கடற்கரைப் பகுதியில் நேற்று நள்ளிரவு வந்து இறங்கி உள்ளனர்.
உணவு,தண்ணீர் இல்லாமல் மயங்கிய நிலையிலிருந்த இருவரையும் மரைன் போலீசார் மீட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கையில் இருந்து இதுவரை 92 பேர் இந்தியாவுக்கு கடல் மூலமாக தப்பிச்சென்று தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது