Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeவெளிநாட்டுஅன்னியச் செலாவணியை கட்டுப்படுத்த பாகிஸ்தான் எடுத்திருக்கும் அதிரடி தீர்மானம்

அன்னியச் செலாவணியை கட்டுப்படுத்த பாகிஸ்தான் எடுத்திருக்கும் அதிரடி தீர்மானம்

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் தேநீருக்கு பதிலாக சர்பத் குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அந்நியச் செலவாணி இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் நிலவி வருகிறது. மேலும் பாகிஸ்தான் முழுவதும் மின் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.


முக்கியமாக பாகிஸ்தானுக்கு தேவையான தேயிலை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தேயிலை அதிகளவில் இறக்குமதி செய்யமுடியாது என்பதால் தேநீர் குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு ஏற்கனவே பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழு, பாகிஸ்தான் மக்களை தேநீருக்கு பதிலாக லெஸ்சி, சர்பத் போன்ற பானங்களை குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தேயிலை இறக்குமதி குறைவால் தேநீர் விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments