Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகொட்டகலையில் 1000 லீற்றர் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்பு ( படங்கள் )

கொட்டகலையில் 1000 லீற்றர் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்பு ( படங்கள் )

(க.கிஷாந்தன்)
 
கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலே திம்புள்ள – பத்தனை பொலிஸாரால் இன்று (26) பிற்பகல் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. 
 
குறித்த வர்த்தக நிலையத்தில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திம்புள்ள – பத்தன  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றில் அடிப்படையில், சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
 
இதன்போது ஆயிரம் லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைக்காக அவர் நாளை (27.06.2022) ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
 
” நாங்கள் மொத்த  வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். போக்குவரத்து சேவைக்கு எமக்கு டீசல் தேவை. அதற்காகவே சேமித்து வைக்கப்பட்டது.” என கைதானவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
 
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments