40,000 மெற்றிக் தொன் எரிபொருளுடன் நாட்டுக்கு வரவிருந்த கப்பல் மீளவும் தாமதமாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தமக்கு அறிவித்ததாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமை காரணமாக எரிபொருள் தாங்கி வரும் குறித்த கப்பல் நாட்டுக்கு வரும் சரியான திகதியை அறிவிக்க முடியாது எனவும் அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால்,எதிர்வரும் நாட்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.