சோசியல் மீடியா அல்லது சமூக வலைத்தளம் என்ற வார்த்தைகள் மனிதர்களுடன் மிகவும் நெருக்கமாக, பசை தடவி ஒட்டி வைத்தது போல் பின்னிப் பிணைந்துவிட்டது.
சமூக வலைத்தளங்கள் ஒரு வகையில் நமக்கு தேவையான சில நல்ல விஷயங்கள் பற்றிய தகவலைக் கொண்டு வந்து சேர்த்தாலும், பல நேரங்களில் இது மோசமான விளைவுகளையே ஏற்படுத்துகிறது. அளவுக்கு மீறினாள் அமிர்தமும் நஞ்சு என்பதற்கான சிறந்த உதாரணமாக சோசியல் மீடியா தளங்கள் மாறிவிட்டது.
மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் படி, இனி இன்ஸ்டாகிராம் பயனர்கள் அவர்களின் ஓட்டுநர் உரிமம் அல்லது அடையாள அட்டை போன்ற ஐடியைப் பதிவேற்றும் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
இதன் மூலம், மக்கள் தங்கள் வயதைச் சரிபார்க்க உதவும் புதிய விருப்பங்களை நிறுவனம் சோதிப்பதாகக் கூறியுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவில் தொடங்கி, இன்ஸ்டாகிராமில் 18 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தங்கள் பிறந்த தேதியைத் திருத்த முயன்றால், இனி Instagram அவர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டிய விருப்பங்களைக் காட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.