மட்டக்களப்பு மாவட்டத்தில்கடும் வெள்ளம் : போக்குவரத்துபாதிப்பு( படங்கள்)

42

( சிவம் பாக்கியநாதன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால் , இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் பிரதான வீதியான திருகோணமலை -மட்டக்களப்பு வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு, மாவட்ட செயலகம் கூறுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட செயலாளர் தலைமையிலான அதிகாரிகள் குழு நேரில் சென்று பார்வை யிட்டதோடு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Join Our WhatsApp Group