பேஸ்புக்கிலிருந்து பதிவிறக்கம் செய்யும் அழகான பெண்களின் படங்களைப் பயன்படுத்தி இணையங்களில் பல்வேறு தவறான செயல்களைச் செய்யும் சில ஆண்கள் தமது தொலைபேசி இலக்கத்தை அதற்கு பயன்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹிருனிகா பிரேமச்சந்திர, ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பேஸ்புக்கிலிருந்து பதிவிறக்கம் செய்த ஒரு அழகான பெண்ணின் தொடர்பு எண்ணாக தமது தொலைபேசி எண் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் பெண்களின் படங்களை பதிவிறக்குகின்றனர். பின்னர் மற்றவர்களின் தொலைபேசி எண்களை அந்த படங்களுக்கான தொடர்பு எண்ணாக சேர்க்கிறார்கள்.

தமது தொலைபேசி இலக்கத்தில் சிறுவன் ஒருவர் தொடர்பு கொண்டபோதே இதை தாம் அறிந்து கொண்டதாக ஹிருனிகா தெரிவித்தார்.

தம்மை அவர் அடையாளம் கண்டுகொண்டபோது தம்மிடம் மன்னிப்பு கோரினார்,அத்துடன் பொலிஸில் முறையிட வேண்டாம் என்று தம்மிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஹிருணிகா தெரிவித்தார்.

இந்த நாட்டில் கோவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து வீட்டு வன்முறை அதிகரித்துள்ள நிலையில் பல பெண்கள் இணைய பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்துள்ளனர்.

இலங்கை ஆண்கள் கடுமையான பாலியல் அழுத்தத்தால் பாதிக்கப்படுவதே இதற்குக் காரணம். பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி சேர்க்கப்படவேண்டிய உகந்த நேரம் இதுவாகும் என்றும் ஹிருனிகா தெரிவித்தார்.

இதேவேளை அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு கருத்துரைத்த அவர், துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மன்னிப்பு வழங்கிய நடைமுறையை மட்டுமே தாம் அறிய விரும்புவதாகக் கூறினார்.

இந்தநிலையில் , அவருடன் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு ஏன் மன்னிப்பு வழங்கப்படவில்லை என்பது தமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

மேலும், இது ஒரு மோசமான முன்மாதிரியாகும், ஏனெனில் எந்தவொரு சக்திவாய்ந்த ஒருவரும் ஒரு ஜனாதிபதி மன்னிப்பைப் பெற முடியும் என்பதால் ஒருவரைக் கொல்வதன் மூலம் தப்பிப்பிழைக்க முடியும் என்று நினைப்பார்கள், என்று அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here