’ஸ்புட்னிக் v’ தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அனுமதி!

0
12

ரஸ்யாவில் உற்பத்தி செய்யப்படும் ‘ஸ்புட்னிக் v’ தடுப்பூசிகள் அளவுக்கு மேலதிகமாக 06 மில்லியனை கொள்வனவு செய்ய நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான ஆவணத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முன்வைத்துள்ளார்.

கடந்த 23ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 07 மில்லியன் ‘ஸ்புட்னிக் v’ தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டதுடன் ஒரு தடுப்பூசியின் விலை 9.95 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இதற்கமைய13 மில்லியன் ‘ஸ்புட்னிக் v’ தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் தயாராக உள்ளது.

08. கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்காக 06 மில்லியன் ‘ஸ்புட்னிக் v’ தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கை குழுவின் பரிந்துரைக்கமைய 07 மில்லியன் ‘ஸ்புட்னிக் v ‘ தடுப்பூசிகளை, ஒரு தடுப்பூசி 9.95 அமெரிக்க டொலர்கள் வீதம் 69.65 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்காக 2021 மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தடுப்பூசியின் அளவுக்கு மேலதிகமாக 06 மில்லியன் ‘ஸ்புட்னிக் v’ தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காகவும் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here