வாட்ஸ் ஆப் செயலி தொடர்பாக ஆய்வில் வெளியாகிய தகவல்

0
2

உலக அளவில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ் ஆப் விளங்குகின்றது.

பேஸ்புக் நிறுவனத்தினால் தற்போது நிர்வகிக்கப்பட்டுவரும் இச் செயலியை பயன்படுத்த புதிய நிபந்தனைகள் கொண்டுவரப்படவுள்ளன.

எனினும் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள பயனர்கள் தயங்குகின்றனர்.

இதனால் பல இலட்சக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் ஆப்பிற்கு மாற்று அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இப்படியிருக்கையில் வாட்ஸ் ஆப்பில் கொண்டுவரப்படவுள்ள இம் மாற்றம் தொடர்பில் இந்திய அளவில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள பெருமளவான பயனர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cybermedia Research (CMR), BM Nxt’s மற்றும் Local Circles ஆகிய நிறுவனங்கள் வெவ்வேறாக இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here