நூருல் ஹுதா உமர்

சட்டம் ஒழுங்கு நீதி என்பன தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை திரு நாட்டில் மலையக சிறுமியின் விவகாரம் இனம், மதம், மொழி, பிரதேசம் கடந்த துயரத்தின் வடு. இந்த நாட்டின் அரசியல் கட்சி ஒன்றின் தலைவரின் வீட்டில் இப்படியான சம்பவம் ஒன்று நடந்தேறியிருப்பது துயரத்தின் உச்சம் என்றே கூறலாம்.

இப்படியான சம்பவங்கள் எப்போது நடக்கும். அதில் எப்படியெல்லாம் அரசியல் செய்யலாம் என்ற ஏக்கத்துடன் உறங்கிய மலையக முதலைகள் எல்லாம் இப்போது வீதிக்கு வந்து நடுவீதியில் கோஷமெழுப்பிக் கொண்டிருப்பதை அரசியல் அம்மணமாகவே நோக்கவேண்டியுள்ளது என தேசிய காங்கிரசின் சட்டவிவகார, கொள்கை அமுலாக்கள் செயலாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான சட்டத்தரணியும், பிரபல இலக்கியவாதியுமான அலறி என்று அறியப்படும் ஏ.எல்.எம். றிபாஸ் தெரிவித்துள்ளார்.

அந்த மக்களுக்கு முறையான பாடசாலை கல்வியை பெற்றுக்கொடுக்க முடியாத, சிறந்த முறையில் மலையக மக்களின் தேவைகளையும் வாழ்வு மேம்பாடுகளையும் திட்டமிட்டு செய்து கொடுக்க திராணியற்ற மலையக அரசியல் தலைவர்கள் அதிலும் குறிப்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இப்படியான ஆர்பாட்டங்களையும் , போராட்டங்களையும் செய்ய அருகதையற்றவர்கள். தன்னுடைய நட்பு கட்சியின் தலைவரை பழிதீர்க்க காத்திருந்தவர்கள் போன்று அமைந்திருக்கும் இவர்களின் செயற்பாடுகள் சோடா மூடியால் உலகை மூட எத்தனிப்பது போன்றுள்ளது.

அந்த சிறுமிக்கு சரியான முறையில் நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்த சூழ்நிலையில் உறங்கு நிலையில் இவ்வளவு காலமும் இருந்த மலையக அரசியல்வாதிகள் சரிந்து கிடக்கும் தனது அரசியல் செல்வாக்கை நேர்ப்படுத்தி இந்த அப்பாவி பெண்ணின் பூதவுடலின் மீது அரசியல் செய்து மாகாண சபை கதிரைகளுக்காக நாடகம் நடிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here