மருதமுனை மதரஸா மாணவர்களுக்கு குர்ஆன் பிரதிகள் வழங்கிவைப்பு!

0
12

கட்டார் நாட்டின் தனவந்தர்கள் மற்றும் தொழில் நிமிர்த்தம் கட்டாருக்கு புலம்பெயர்ந்த இலங்கையர்களின் அனுசரணையில் இலங்கை பைத்துல் ஹெல்ப்  அமைப்பினால் மருதமுனை மஸ்ஜித்துல் நூர் ஜும்மா பள்ளிவாசலில் இயங்கும் ஹிபுல் மதரஸா மாணவர்களுக்கு குரான் பிரதிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

அரச காரியாலயங்கள், பாடசாலைகள்,  பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர்  வழங்குதல், மாணவர்களின் கல்விக்கு கைகொடுத்தல் என பல சமூக நல வேலைத்திட்டங்களை பைத்துல் ஹெல்ப் அமைப்பு மக்களுக்காக தொடர்ந்தும் நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இலங்கை பைத்துல் ஹெல்ப் அமைப்பின்  பிரதானி ரைஸுல் ஹக்கீம் குரான் மதரஸா மாணவர்களின் நலன்கருதி இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

இந்நிகழ்வில் மருதமுனை மஸ்ஜித்துல் நூர் ஜும்மா பள்ளிவாசலின் தலைவர், செயலாளர் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

நூருல் ஹுதா உமர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here