மதபோதகர்களுக்கு சம்பள வெட்டு!

0
1

கொரோனா பெருந்தொற்றால் வத்திக்கான் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில் கருதினால்கள் மற்றும் போதகர்களுக்கான சம்பள வெட்டுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.

கருதினால்கள் சம்பளத்தில் வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் 10 வீத குறைப்பு செய்யப்படும் என்று வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் மாதாந்தம் 5,900 அமெரிக்க டொலர்கள் வரை பெறுவதாக நம்பப்படுகிறது.

பாதிரியார்கள் மற்றும் ஏனைய போதகர்களுக்கான சம்பளத்தை 3 மற்றும் 8 வீதத்திற்கு இடையே குறைப்பதற்கு திட்டமிடப்பட்டிரு ப்பதோடு அவர்களுக்கான சம்பள உயர்வுகளும் 2023 மார்ச் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் இந்த ஆண்டில் 50 மில்லியன் பௌண்ட் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருந்தொற்றால் அருங்காட்சியகங்கள் மற்றும் மேலும் ஈர்க்கத்தக்க இடங்கள் மூடப்பட்டு வத்திக்கானின் வருவாய் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மோசமான பொருளாதார சூழலில் மக்களை தொழில் இருந்து நீக்குவதற்கு தாம் விரும்பவில்லை என்று பாப்பரசர் முன்னர் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பள வெட்டின் மூலம் சிறு தொழிலாளர்களின் தொழிலை பாதுகாக்க பாப்பரசர் முயன்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here