மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்குதல்!

0
12

மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராகத் தடை எழுத்தானை கோரி, மாநகர சபை முதல்வரினால், மட்டக்களப்பு மேல் நீதிமன்றில், தன் ஊடாக இன்று வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாநகரசபை தீர்மானத்தின் மூலம் முதல்வரினால் 10 அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் பெப்ரவரி 11ஆம் திகதி இன்னொரு சபை தீர்மானத்தின் மூலம் கையளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டுள்ளன.

குறித்த அதிகாரங்கள் மீளப் பெற்றுள்ள நிலையில், அதற்கு நான் நடக்கமாட்டேன் எனவும், அந்த அதிகாரங்களைத் தானே பயன்படுத்துவேன் என்றும் விடாப்பிடியாக மாநகர ஆணையாளர் செயற்பட்டுக் கொண்டிருப்பதன் காரணமாக, அவரை அப்படியான செயற்பாட்டிலிருந்து தவிர்ப்பதற்கும், அந்த அதிகாரங்களை அவர் பிரயோகிப்பதை சட்டரீதியாக நிறுத்துவதற்கும், அவற்றைச் சட்ட ரீதியாகத் தடுக்கும் நோக்கில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் மேல் மனுதாரால் கேட்டிருக்கின்ற நிவாரணங்கள் ஏன் வழங்கப்படக்கூடாது? என நீதிமன்றம் கேட்டு, மட்டக்களப்பு ஆணையாளரிற்கும் இரண்டாவது பிரதிவாதியான கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிற்கும் ஏப்ரல் முதலாம் திகதி வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளும்போது, ஏன் இந்த நிவாரணங்கள் வழங்கப்படக்கூடாது? என்பதற்கு அவர்கள் காரணம் காட்டவேண்டும் என நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here