மட்டக்களப்பில் வீதியில் கண்டெடுத்த பணப்பையை உரிய நபரிடம் வழங்கிய பொலிஸ் அதிகாரி

0
6

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வீதியில் அநாதரவாக கிடந்த பணம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் உட்பட பல ஆவணங்களுடனான கைப்பையொன்றை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டெடுத்து, அதனை உரியவரிடம் இன்று (26) மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று (25) கொக்கட்டிச்சோலை பகுதியில் இருந்து உழவு இயந்திரத்தில் கல் ஏற்றிக் கொண்டு திக்கோடை பகுதிக்குச் சென்ற போது அவருடைய கைப்பை காணாமல் போயுள்ளது.

இதனையடுத்து அவர் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறையிட்ட நிலையில், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பொருள் கொள்வனவு பிரிவில் கடமையாற்றும் அம்பாறையைச் சோ்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஆர்.பி.டி. துமிந்த நேற்று மாலை அந்த பகுதி வீதி ஊடாக வீடு திரும்பும் போது வீதியில் அநாதரவாக கிடந்த கைப்பையை கண்டெடுத்துள்ளார்.

அதில் 11 ஆயிரம் ரூபா பணம், சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை, வங்கி அட்டைகள் உட்பட ஆவணங்கள் இருந்துள்ளன.

இதனையடுத்து குறித்த கைப்பையின் உரிமையாளரை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு வரவழைத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க முன்னிலையில் அதனை பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here