“பெரும்பான்மை மக்களுக்கு மாத்திரம் சேவையாற்றுவேன்” – ஜனாதிபதியின் கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது; சுமந்திரன் எம்.பி!

0
11

இந்நாட்டில் சிங்கள, பௌத்த மக்களுக்கு இருக்கும் சகல உரிமைகளும் தமிழ் பேசும் மக்களாகிய எங்களுக்கும் உண்டு. ஏனெனில் நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள் என்றாலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுதந்திரதின நிகழ்வில் பேசும்போது “நான் சிங்கள பௌத்தன்” என்று தெரிவித்தார். அவர், அவ்வாறு கூறியது எங்களுக்கு பிரச்சினையில்லை. எனினும், இந்நாட்டின் ஜனாதிபதி, பெரும்பான்மை மக்களுக்கு மாத்திரம் சேவையாற்றுவேனென்று தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“எங்களுக்கும் இந்நாடு சொந்தமானது. நாங்களும் வசிக்கின்றோம். அதேபோன்று பெரும்பான்மை மக்களும் இந்நாட்டில் வசிப்பதற்கான உரிமை உள்ளது. எங்களின் உரிமைகளை அகற்ற முடியாது. இதன் அடிப்படையிலேயே நாங்கள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான இந்த நடைபவனியை மேற்கொள்கின்றோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here