நடிகர் அஜித்துடன் அவரது ரசிகர்கள் சிலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹைதராபாத், ராஜஸ்தானில் வலிமை படப்பிடிப்பை முடித்த படக்குழு சண்டைக் காட்சிக்காக தென் ஆப்பிரிக்கா சென்றது. இம்மாத இறுதிக்குள் படத்தை முடித்து அஜித்தின் 50-வது பிறந்தநாளான மே 1-ஆம் தேதி தியேட்டர்களில் கொண்டுவர கடுமையாக உழைத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அப்டேட் விரைவில் வரும் என தயாரிப்பாளர் தெரிவித்தார்.
படப்பிடிப்பை முடித்த அஜித், 10ஆயிரம் கிலோமீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார். அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் பரவின. இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் இன்று வைரலாகி வருகிறது. ஷார்ட் ஹேர்ஸ்டைல், கருப்பு நிற டி சர்ட், கருப்பு நிற தொப்பியுடன் மாஸாக இருக்கிறார் அஜித். அஜித்துடன் ரசிகர்கள் பலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.