பிரபல மூத்த ஒலி, ஒளிபரப்பாளர் ரஷீத் எம். ஹபீலின் மறைவு ஊடகத்துறைக்கு பெரும் இழப்பு!

0
4

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக அங்கத்தவரும் அதன் நீண்ட கால உப தலைவர்களுள் ஒருவருமான பிரபல மூத்த ஒலி, ஒளிபரப்பாளர் ரஷீத் எம். ஹபீல் நேற்று அதிகாலை தனது 75ஆவது வயதில் காலமானார்.

ஊடகத் துறையில் பழுத்த அனுபவம் மிக்க ரஷீத் எம். ஹபீல் ரூபவாஹினி முஸ்லிம் பிரிவின் முன்னாள் தலைவராக கடமையாற்றி இலங்கை முஸ்லிம் ஊடகவியல் பரப்பில் முன்னோடிகளுள் ஒருவராகவும் திகழ்ந்தாரென ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என். எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்:-

மற்றும் பல ஊடகவியலாளர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த அவர், இளம் ஊடகவியலாளர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவதில் கூடுதல் கரிசனை செலுத்தி வந்தார். இளம் ஊடகவியலாளர்களது அலுவலகத்திற்கு, வீடுகளுக்கு தேடிச் சென்று அவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி வாழ்த்துக்கள் தெரிவிப்பார்.

அவரது ஊடகத் துறைப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் 2011ஆம் ஆண்டு சிறப்பு விருது வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரது மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here