பாடசாலை வேனிலிருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு!

0
10

வெல்லவாய – எல்ல வீதியில், ஹுணுகெட்டிய சந்தியில் இன்று (25) மதியம் ஏற்பட்ட வாகன விபத்தில் முன்பள்ளி மாணவியான பரகஹஅராவ எனும் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முன்பள்ளி நிறைவடைந்த பின்னர் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேனில், வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென அதன் கதவு திறக்கப்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான சிறுமி வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவத்தின் பின்னர் குறித்த வேன் சாரதி வெல்லவாய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் நாளை (26) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here