நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 772 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 742 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 30 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 694 ஆக காணப்படுகின்றது.
அத்துடன், கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் ஆயிரத்து 520 பேர் கொரோனா தொற்றில் இருந்து நேற்றைய தினம் குணமடைந்துள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை நாட்களில் அதிகளவு தொற்றாளர்கள் ஒரே நாளில் குணமடைந்த முதலாவது சந்தர்ப்பமாக இது இடம்பெற்றுள்ளது.
மேலும், குறித்த தொற்றாளர்கள் குணமடைந்ததின் ஊடாக நாட்டில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 566 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் 7 ஆயிரத்து 838 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.