நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் நாடு மீண்டும் சிவப்பு வலயத்திற்குள் நுழையும் அபாயம் உள்ளதால், நாட்டை பச்சை வலயத்தில் தொடர்ந்தும் பேணுவது மக்களின் கடமையாகும் என சுகாதார அமைச்சின் தொழிநுட்ப சேவைகள் பணிப்பாளர் நாயகம் அன்வர் ஹம்தானி (Anwar Hamdani) தெரிவித்துள்ளார்.

இலங்கை சிவப்பு வலயத்திலிருந்து பச்சை வலயத்துக்கு முன்னேறியுள்ளது. கோவிட் தொற்றுப் பரவலைக் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தும் நாடுகள் பச்சை வலயத்தில் சேர்க்கப்படும்.

எனினும், நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் நாடு மீண்டும் சிவப்பு வலயத்துக்கு நுழையும் அபாயம் உள்ளது.

எனவே, நாட்டை பச்சை வலயத்தில் தொடர்ந்தும் பேணுவது மக்களின் கடமையாகும். நாட்டில் பதிவாகும் நாளாந்தக் கோவிட் உயிரிழப்பு மற்றும் தொற்று எண்ணிக்கையின் அடிப்படையில் சுகாதார ஸ்தாபனம் உட்படப் பல சர்வதேச அமைப்புகள் இலங்கையை மீண்டும் பச்சை வலயத்துக்குள் அனுமதித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here