நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளில் அறிக்கைகளை வெளியிட முடிவு!

0
9

நாடாளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிட பெருமளவு செலவு ஏற்படுவதனால் எம்.பி.க்கள் விரும்பும் மொழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை அச்சிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சபைக்கு அறிவித்தார்.  

அவர் மேலும் கூறுகையில்,  

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிட்டு வழங்க பெருமளவு செலவு ஏற்படுகின்றது. இதனைக்கட்டுப்படுத்த வேண்டும். எனவே சபை உறுப்பினர்களின் மேசைகளில் அவர்கள் அறிக்கைகளை பெற விரும்பும் மொழி தொடர்பிலான விபரம் கோரும் படிவம் வைக்கப்பட்டுள்ளது. எனவே உறுப்பினர்கள் தாமதிக்காது அறிக்கைகளை எந்த மொழியில் தாம் பெற விரும்புகின்றோம் என்ற விபரத்தை பதிவு செய்து வழங்குமாறு கோருகின்றேன்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here