நாடளாவிய அளவில் 15,000 வீடுகளை அகற்ற திட்டம்

0
2

நாடளாவிய ரீதியில் அபாய வலயங்களில் உள்ள 10,000 வீடுகளை அகற்ற திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் இவ்வாறான வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

வீடுகளிலிருந்து அகற்றப்படுவோருக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணிகளை கையகப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட பகுதிகளில் காணிகளை பெறுவதில் சில சிக்கல்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் சமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.

சிக்கல்களை நிவர்த்தி செய்து , வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சில பகுதிகளில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான காணிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சமல் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here