நஸீர் எம்.பியின் வேண்டுகோளின் பேரில் விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி!

0
11

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளின் பேரில் 04 விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு விளையாட்டு மைதானங்கள் தலா 15 இலட்ச ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

உடனடியாக வேலைத் திட்டங்களைத் தொடங்கும் வகையில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, மாவட்டச் செயலாளருக்கு அறிவித்துள்ளது.

இதன்படி, ஏறாவூர் பக்தாத் விளையாட்டு மைதானம், காத்தான்குடி பதுறியா விளையாட்டு மைதானம், மீராவோடை அல் ஹிதாயா மைதானம், வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய மைதானம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக தலா 15 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here