தமிழ்-முஸ்லிம் உறவை சிதைக்காதீர்.

0
52

இன்றைய தாதியர் ஆர்ப்பாட்டமும் பின்னாள் மறைந்துள்ள இனவாதமும்

இன்று 19/01/2021 செவ்வாக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்றலில் அரச தாதியர் சங்கமும் ஐக்கிய தாதியர் ஒன்றியமும் இணைந்து ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.இவ் ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் கலந்து கொண்டனர்.

இவ் ஆர்ப்பட்டத்திற்கான காரணமாக நேற்றைய முன்தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவரை சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் Dr.MSM.ஜாபிர் மட்டக்களப்பு தாதியர்களுக்கு இங்கு இடமில்லை காத்தான்குடியைச் சேர்ந்த ஊழியர்களையே அனுமதிப்பேன் என்று மறுத்ததாகவும் பின்னர் அவர் கல்லாறு கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் கொரோனா நோயால் பாதிக்கப்படும் தாதியர்களுக்கென விஷேட சிகிச்சைப் பிரிவை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்குமாறும்
கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் தாதியர்களுக்கு விஷேட சலுகை வழங்குமாறும் கோருவதாக ஆர்ப்பாட்ட எற்பாட்டாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் காத்தான்குடி வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஜாபிர் குறித்த தாதியை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க மறுத்தாக கூறியதும் மட்டக்களப்பு தாதியரை காத்தான்குடியில் ஏற்க மாட்டேன் எனக் கூறியதாக கூறியதும் மிகப் பெரும் இட்டுக்கட்டப்பட்ட பச்சப் பொய்யாகும் என்பதை மட்டக்களப்பு மக்களுக்கும் தமிழ் உறவுகளுக்கும் பகிரங்கமாக கூறிக் கொள்கின்றேன்

இங்கு ஆர்ப்பாட்டம் செய்ததையோ தாதியருக்கான சிகிச்சை பிரிவை கோரியதையோ மற்றும் விஷேட சலுகைகளை கோரியதையோ நாம் ஏற்றுக் கொண்டு ஆதரிக்கின்றோம்.

அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தாதியர்களுக்கு இவ் வசதிகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டியதே.இதற்கான ஏற்பாட்டை கண்டிப்பாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் செய்து கொடுத்திருக்க வேண்டும்.

தாதியர்கள் தங்கள் கோரிக்கைகளை கோரியதில் தவறில்லை.
ஆனால் நடக்காத ஒன்றை நடந்ததாக இட்டுக்கட்டி காத்தான்குடி என்ற ஊரையும் முஸ்லிம் வைத்திய அத்தியட்சகரையும் இனவாதியாக காட்டி
தமிழ் முஸ்லிம் பிரிவினையை துண்டும் வகையில் கேவலமாக நடந்து கொண்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

குறித்த தாதி தொடர்பில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஜாபிர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களிடம் மேற்கொண்ட
கலந்துரையாடலில் கிடைக்கப்பெற்ற தகவல்களை இங்கு பதிவிடுகின்றேன்.

மேற்படி தாதி காத்தான்குடி வைத்தியசாலைக்கு அனுமதிக்கு வந்த போது வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜாபிர் அங்கு இருக்கவில்லை. இல்லாத அத்தியட்சகர் எப்படி மட்டக்களப்பு தாதியரை காத்தான்குடியில் அனுமதாக்க மாட்டேன் என சொல்ல முடியும்.?

மேலும் குறித்த தாதி அனுமதியின் போது தனக்கு விஷேடமான தனியான கழிவறை வசதியுடன் கூடிய தனி வார்ட்டை( special ward) கோரியுள்ளார்.

அத்தகைய விஷேட தனியான விடுதி காத்தான்குடி வைத்தியசாலையில் இல்லை என தெரிவித்த வைத்தியர் மற்றும் தாதியர் தங்களால் கொரோனாவிற்கான பொது விடுதியிலேயே(common ward)அனுமதிக்கவே தம்மால் முடியும் என தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த அத்தாதி பின்னர் வேறு வழியின்றி குறித்த பொது விடுதியிலேயே அனுமதியை பெற்றுள்ளார். ஒருநாள் வைத்தியசாலையில் தங்கியும் இருந்துள்ளார்

ஆனால் ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஏற்பாட்டாளர் குறித்த தாதி படியிலே குந்திக் கொண்டு இருந்ததாகவும் பொய்கூறுகிறார்.

பின்னர் தாதி தன் சுய விருப்பத்தின் பேரில் discharge பண்ணிக் கொண்டு கல்லாறு வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இன்றைய ஆர்ப்பாட்டத்தை செய்தியாக்கிய ஊடகங்கள் தமிழ் முஸ்லிம் உறவை சிதைக்கும் வகையிலேயே செய்தியை வெளியிட்டிருந்தன.இதற்கு தாதியர் சார்பில் பேசியவர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துகளே காரணமாக அமைந்திருந்தன.

மேலும் அக்கருத்து தமிழர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற போலித் தோற்றப்பாட்டையும் ஏற்படுத்துகிறது.

இது வரையில் பல தமிழ் சிங்கள சகோதரிகள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.

இன்றும் 19/01/2021நாவற்குடா கல்லடியைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கொரோனா விடயங்களை கையாள டாக்டர் பிரபா சங்கர் என்பவரையே டாக்டர் ஜாபிர் நியமித்துள்ளார்.

தாதியர்களே உங்கள்சேவைகளை மதிக்கிறோம். உங்கள் கோரிக்கைகளை
இன உறவை பாதிக்காத வகையில் வகையில் பெற்றுக் கொள்ளுங்கள். காத்தான்குடியை பழி கொடுத்து இன உறவை சிதைத்து அதனை அடைய தயவு செய்து முயற்சிக்க வேவண்டாம்.

யாரோ துவேசிகள் உங்களை துரும்பாக்கி தங்கள் நிகழ்ச்சி நிரலை அடைந்து கொள்ள முயற்சிக்கும் சதி வலைக்குள் அகப்பட வேண்டாம்.

உங்கள் காணொலி காத்தான்குடி மக்கள் மீது தமிழ் மக்களை நிச்சயமாக கோபம் கொள்ள வைத்திருக்கும்.
தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து செயற்பட வேண்டிய இக்கட்டான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நான் மிக நீண்ட காலமாக தமிழ் முஸ்லிம் உறவு செழிக்கப் பாடு பட்டு வருபவன். இதை என் அன்பு தமிழ் உறவுகள் அறியும்.

காத்தான்குடி மக்கள் தாம் மோசமாக வஞ்சிக்கப்படுவதாகவே உணர்கின்றனர். அதிகாரத் தரப்பும் நிர்வாகமும் தம்மை திட்டமிட்டு நசுக்குவதாக கருதுகின்றனர்.
.
தமிழர்களும் முஸ்லிம்களும் மிக பொறுப்புடன் நடந்து கொள்வோம்.
இன உறவை பேணி வளர்ப்போம்.

பொறுப்புடன்
யூஎல்எம்என் முபீன்
முன்னாள் தவிசாளர்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here