தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளின் வாக்குகள் பற்றிய தகவல்

0
2

தமிழக சட்டசபை தேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவீதத்தை பெற்றது என்று தேர்தல் ஆணையம் விவரங்களை வெளியிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி இடம்பெற்றதுடன் இதையடுத்து நேற்றைய தினம் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதுடன், முதல்வராக மு.க.ஸ்டாலின் மே 7ஆம் திகதி பதவியேற்றுள்ளார்.

இதில் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை

 • திமுக கூட்டணி – 159
 • திமுக – 125
 • காங்கிரஸ் – 18
 • விசிக – 4
 • மதிமுக (உதயசூரியன் சின்னம்) – 4
 • சிபிஎம் – 2
 • சிபிஐ – 2
 • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் – 4
 • அதிமுக கூட்டணி – 75
 • அதிமுக – 65
 • பாமக – 5
 • பாஜக – 4
 • இதர கட்சிகள் – 1

தமிழகத்தில் ஆட்சி அமைக்க 234 இடங்களில் 118 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கிறது.

தமிழக சட்ட சபை தேர்தலில் கட்சிகள் பெற்று வாக்கு சதவீதம்

 • திமுக – 37.15%
 • அதிமுக – 33.28%
 • காங்கிரஸ் – 4.28%
 • பாட்டாளி மக்கள் கட்சி – 3.81%
 • இந்திய கம்யூனிஸ்ட் – 1.09%
 • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 0.85%
 • தேமுதிக – 0.43%
 • பாஜக – 2.63%
 • விசிக – 1.3%
 • முஸ்லிம் லீக் – 0.48%
 • மக்கள் நீதி மய்யம் – 2.4%
 • நாம் தமிழர் கட்சி – 6.6%
 • அமமுக – 2.4%  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here