ஜமால் கசோக்கியின் கொலை; விசாரணையாளரை சவூதி ‘மிரட்டியது’ உறுதி!

0
9

சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்தும் சுயாதீன நிபுணர் ஒருவருக்கு சவூதி மூத்த அதிகாரி ஒருவர் மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டதை ஐ.நா மனித உரிமை அலுவலகம் உறுதி செய்துள்ளது.

அக்னஸ் கல்லமார்ட் என்ற அந்த நிபுணருக்கு அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக தி கர்டியன் பத்திரிமை செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விபரத்தின் உண்மைத் தன்மையை ஐ.நா மனித உரிமை பேச்சாளர் ருபர்ட் கொல்வில்லே உறுதி செய்துள்ளது.

ஊடகவியலாளரின் படுகொலை பற்றிய விசாரணையை நிறுத்தாவிட்டால் ‘கவனிக்கப்படுவீர்கள்’ என்று சவூதி அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்தார் என்று கல்லமார்ட் தி கார்டியன் பத்திரிகைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

இந்த அச்சுறுத்தல் பற்றி ஐ.நா மனித உரிமை அலுவலகத்தை அறிவிறுத்தியதாகவும் மேலும் ஐ.நா பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திடம் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சவூதியின் ஸ்தான்பூல் துணைத் தூதரகத்தில் வைத்து சவூதி முகவர்களால் 2018 ஒக்டோபர் மாதம் கசோக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தே கல்லமார்ட் தலைமையிலான ஐ.நா விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டது.

2019இல் வெளியிடப்பட்ட அவரது அறிக்கையில் இந்த படுகொலையின் பின்னணியில் சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் மற்றும் மூத்த சவூதி அதிகாரிகள் இருப்பதற்கு நம்பகவமான ஆதராங்கள் உள்ளதாக கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here