கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபின், தனது இல்லத்தில் ஓய்வு பெற்று வந்த சுகாதார சுதேச வைத்திய அமைச்சரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாரச்சி, தற்போது பூரணக் குணமடைந்துள்ளார் எனவும் விரைவில் தனது அமைச்சுக் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் என்றும் அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அமைச்சரின் சுகயீன நிலைமையை அடுத்து, சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.