உள்நாட்டு டயில் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் டயில் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும், சீனாவில் இருந்து தேசிய நிறுவனம் டயில் இறக்குமதி செய்துள்ள விடயம் தனக்குத் தெரியாது என வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அது குறித்து தகவல் அறிந்ததும் இலங்கை சுங்கத்திற்கு அழைத்து இறக்குமதி டயில் பொருட்களை தடுத்து வைக்குமாறு பணித்ததாக அமைச்சர் விமல் கூறியுள்ளார்.
இறக்குமதி செய்த நிறுவன உரிமையாளரை அழைத்து கண்டிக்குமாறும் அனுமதி வழங்கிய அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறும் வர்த்தக அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அல்ட்ரா ரெபின் லங்கா என்ற நிறுவனம் அனுமதி பெற்று 9.7 மில்லியன் பெறுமதியான டயில் இறக்குமதி செய்துள்ளதாக தெரியவருகிறது.