Thursday, January 28, 2021
Home வேலைவாய்ப்பு சமூகசேவை உத்தியோகத்தர் போட்டி பரீட்சைக்கான அறிவித்தல்!

சமூகசேவை உத்தியோகத்தர் போட்டி பரீட்சைக்கான அறிவித்தல்!

(கிழக்கு மாகாணத்துக்குரியது)

கிழக்கு மாகாண பொதுச் சேவையின்

சமூகசேவை உத்தியோகத்தர், தரம்-II இற்கு மாகாண ரீதியான புள்ளிகளின் முன்னுரிமை
வரிசை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2021 க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

Open Competitive Examination for Recruitment of Social Service Officers Grade-II in Eastern Province-2021

கல்வித் தகைமைகள் :

  1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து சமூகவியல் அல்லது உளவியல் அல்லது சமூக சேவை ஆகிய துறைகளில் பட்டம் ஒன்றை பெற்றிருத்தல் வேண்டும்.

அத்துடன்

2 கல்விப் பொதுத் தராதர (உ/த) பரீட்சையில் (சாதாரண பொதுப்பரீட்சை தவிர்ந்த)
அனைத்துப் பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்டதல் வேண்டும். (பழைய பாடத்திட்டத்தின் கீழ் ஒரே அமர்வில் மூன்று (03) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்
போதுமானது.)

#வயதெல்லை : 21-35

#போட்டிப்பரீட்சைகள் விபரம்
✅ பொது விவேகம்
✅ பொது அறிவு
✅ கட்டுரையும் சாராம்சம் எழுதுதல்

#பரீட்சைக்கட்டணம் ரூபா. 500/-

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

செயலாளர்,
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,
கிழக்கு மாகாணம்
198, உட்துறைமுக வீதி,
திருகோணமலை

குறிப்பு – விண்ணப்பங்கள் அனுப்புகின்ற கடித உறையின் இடது பக்கமேல் மூலையில் பரீட்சைக் குறியீட்டு இலக்கம் EX/Rec/21/01 என்பதை குறிப்பிடுவதோடு “சமூக சேவை
உத்தியோகத்தர் தரம் II பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2021” என குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments