முற்பதிவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் கிடைத்ததும், நாளொன்றிற்கு 5 இலட்சம் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக COVID -19 ஒழிப்பு மற்றும் ஆரம்ப சுகாதார சேவை அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்து 50 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மேலும் 3 மில்லியன் தடுப்பூசிகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுகாதார ஊழியர்கள், முப்படையினர், 60 வயதிற்கு மேற்பட்ட சக்கரை நோய், உயர் குருதி அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட நோயாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி, தடுப்பூசிகள் ஏற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.