கொழும்பு குப்பை பிரச்சினைக்கு தீர்வு!

0
10

கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16)  ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதுடன், மின் சக்தியும் சேகரிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்காக முத்துராஜவெல பகுதியில் 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனூடாக கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு நாளில் சேகரிக்கப்படும் 700 தொன் குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here